திருப்புவனம் காஞ்சிரங்குளத்தில் வாய் தகராறில் முதியவரை கொலை செய்து தப்பி ஓடிய பள்ளி மாணவனை கைது செய்த போலீசார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் காஞ்சிரங்குளத்தை சேர்ந்த கேசவன் மகன் கருப்பையா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன்-சுமதி தம்பதியரின் மகனும் பத்தாம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவனுமான சக்திகணேஷ் (18) என்பவருக்கும் ஏற்பட்ட வாக்குவாத தகராறில் ஆத்திரமடைந்து சக்திகணேஷ் கருப்பையாவை கூர்மையான ஆயுதத்தால் வயிற்றில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கருப்பையா நிலைக்குலைந்து உயிரிழந்தார். தப்பி ஓடிய சக்திகணேஷை இரண்டு கிலோமீட்டர் போலீசார் விரட்டி பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் சக்தி கணேஷ் மீது மூன்று திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மானாமதுரை துணை கண்காணிப்பாளர் திரு நிரேஷ் அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக