மானாமதுரையில் நடைபெற்ற தாய் தமிழர் கட்சியின் 2வது மாநில பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் திருமண மஹாலில் தாய் தமிழர் கட்சியின் 2-வது மாநில பொதுக்குழு கூட்டம் தாய் தமிழர் கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் மக்கள் போராளி பி. ம. பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில பொதுச் செயலாளர் மற்றும் மாநில பொதுக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு ச. அ. செல்வம் மற்றும் மாநில இளைஞர் அணி செயலாளர் சுதன் ஆகியோர் முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து பொதுக்குழுவில் தமிழர் நலம் சார்ந்த பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் தொடர்ச்சியாக மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் இளைஞர் அணி, மாணவர் அணி, ஊடகப் பிரிவு, தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக