ஜன 25.நாசரேத். நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 76வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளி தலைவர் எலிசபெத் ஜெபம் செய்து விழாவை தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவி முத்துபகவதி, வைஷ்னவி விழாவை தொகுத்து வழங்கினர். பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தேசிய கொடி ஏற்றினார். பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ், பள்ளி உதவி முதல்வர் மாரிதங்கம் விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.
பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் நம் முன்னோர் சுதந்திரத்திற்காக செய்த தியாகத்தையும், அதை நாம் எப்படி பேணிகாக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தார். பள்ளி மாணவர்கள் குடியரசு தினத்தைப் பற்றியும், நம் தேசத்திற்காக பாடுபட்ட தேசத் தலைவர்களைப் பற்றியும் பேசினா.; டாக்டர் அம்பேத்கர் இயற்றிய சட்ட திட்டங்களை நாடகம் மூலம் நடித்துக் காட்டினர்.
பள்ளி குழந்தைகள் அனைத்து மாநிலத்தில் உள்ள பாரம்பரிய உடைகளை அணிந்து வந்து நடனம் மூலம் மகிழ்வித்தனர்;. நாடகம் நடத்தியும் காட்டினர். இறுதியில்; மாணவி இவான்யா நன்றி கூறினார்.
இந்த விழா ஏற்பாட்டினை உடற்கல்வி ஆசிரியர் லாரன்ஸ் மற்றும் பிற ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழா இறுதியில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தேசிய கீதம் முழங்க குடியரசு தின விழா இனிதே நிறைவடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக