பட்டப்பகலில் ஆட்டோ பைனான்சியர் கழுத்தை அறுத்து படு கொலை ! போலீசார் விசாரணை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 ஜனவரி, 2025

பட்டப்பகலில் ஆட்டோ பைனான்சியர் கழுத்தை அறுத்து படு கொலை ! போலீசார் விசாரணை!


வேலூர் , ஜன 25 -
வேலூர்மாவட்டம், வேலூர் ரங்காபுரம் செங்காநத்தம் சாலையில் உள்ள மஹாவீர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ பைனான்சியர் செந்தில்குமார் (வயது 39). இவருக்கும் மஞ்சரி (வயது 34) என்பவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகளாகிறது. இவர் இதற்கு முன்னர் சலவன் பேட்டை பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் இவரது மகள் யுவஸ்ரீ (வயது 13) தனது மகளை காலை இரு சக்கர வாகனத்தில் பள்ளியில் விட்டுவிட்டு வந்துள்ளார். சேண்பாக்கம் ராகவேந்திரா ஆலயத்தின் பின்புறம் பாலாற்றை ஒட்டியுள்ள பகுதியில் பகல் நேரத்தில் மர்ம நபர்கள் செந்தில் குமாரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்கு விசாரண் நடத்தினர்.
இது குறித்து வழக்குபதிவு செய்து செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்பநாயை வரவழைத்து துப்பறியும் பணி மேற்கொள்ளப்பட்டது. நீண்ட தூரம் ஓடியும் மோப்பநாய் யாரையும் பிடிக்கவில்லை. கொலைக் கான காரணமும் தப்பி ஓடிய மர்ம நபர்கள் யார் என்றும் தெரியவில்லை. சத்துவாச்சாரியிலிருந்து கொலை நடந்த ஸ்பாட்டுக்கு அவர் அவரது வண்டியிலே யே சென்றுள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.பட்ட பகலில் நடந்த இந்த கொலை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad