வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலருக்கு சிறந்த சுகாதார அலுவலர் விருது வழங்கி கௌரவித்த வி ஐ டி பல்கலைக்கழகம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 ஜனவரி, 2025

வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலருக்கு சிறந்த சுகாதார அலுவலர் விருது வழங்கி கௌரவித்த வி ஐ டி பல்கலைக்கழகம்!



வேலூர்,ஜன.25-
வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் குடியரசு தின விழாவையொட்டி ராஜ் டிவி மற்றும் விஐடி சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. 
விஐடி துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தொலைக்காட்சி புகழ் மதுரை முத்து பட்டிமன்ற நடுவராக பங்கேற்றார். 
நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் வேலூர் மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவில் பணிபுரிந்து வரும் சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமாருக்கு  சிறந்த சுகாதார அலுவலர் விருது வழங்கி கௌரவிக் கப்பட்டது. இவர் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக மூன்று மாவட்ட கலெக்டர்களிடம் சிறந்த சுகாதார அலுவலர் விருது மற்றும் நற்சான்று பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad