கே.வி.குப்பம் ,ஜன,9 -
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் நாகல் கிராமத்தில் பாஜக வை சேர்ந்த விட்டால் குமார் இவர் ஆன்மீகப்பிரிவு மாவட்ட செயலாளராக இருந்தார்
கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி சென்னங்குப்பம் அருகே சாலை ஓரத்தில் அடிபட்டு ரத்த காயத்துடன் விழுந் திருந்தார் அப்போது அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் திட்டமிட்டு தாக்கி விட்டல் குமாரை கொலை செய்து உள்ளார்கள் என்று கூறி அவரது குடும்பத்தினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் விட்டல் குமார் மனைவி ரேவதி தனது கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கே வி குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்
இதை அடுத்து விட்டல் குமார் இறப்பில் சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது
இது சம்பந்தமாக நாகல் கிராமத்தை சேர்ந்த கமலதாசன் (வயது 24) சந்தோஷ் குமார் (வயது 26) ஆகியோர் டிசம்பர் 20ஆம் தேதி காட்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்
மறுநாள் நாகல் ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட்டு வயது 55 அவரது மகன் தரணி (குமார்28 )ஊராட்சி செயலாளர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்
மேலும் தலைமறைவாக உள்ள பாலா சேட்டு மகன் வக்கீல் ராஜேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர் இந்நிலையில் பாலா சேட்டு கமலதாசன் சந்தோஷ் தரணி குமார் ஆகிய நான்கு பேர் பல்வேறு தொடர் குற்ற செயல் ஈடுபட்டதால் எஸ்பி மதிவாணன் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி நான்கு நபர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக