மயிலாடுதுறை அருகே தருமபுரம் கிராமத்தில் அமைந்துள்ள திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் அவர்களின் மணி விழா கடந்த 24/10/2024 அன்று நடைபெற்றது.
அன்று முதல் தினசரி ஒரு நூல் என்ற வீதம் ஒரு ஆண்டிற்கு 365 நூல் வெளியீடு நடைபெற்று கொண்டிருக்கிறது.
மணிவிழா நடந்ததையொட்டி மார்கழி மாதம் முழுவதும் 300 திருக்கோவில்களை தரிசனம் செய்ய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களாம்பிகை சமேத மங்களநாத சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு "திருராமேச்சுரம் தல வரலாறு திருப்பதிகங்கள்" என்ற நூலை வெளியிட்டார்.
தொடர்ந்து திருச்செந்தூருக்கு வருகை தந்த அவர் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்பு திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
அவர்களை திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஆண்ட்ரூஸ், மு.செல்லையா பிள்ளை, திருநெல்வேலி மாநகர மேயர் ஜி.ராமகிருஷ்ணர் ஆகியோர் வரவேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக