குடியாத்தம் ,ஜன 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்து முன்னணி சார்பாக நடத்தும் பாண்டியன் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு கிராம தேவதை ஓம் சக்தி அம்மன் ஏழாம் ஆண்டு 108 பால்குடம் அபிஷேகம் மற்றும் மகா கணபதி ஹோமம் விமர்சியாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணியைச் சேர்ந்த நகர செயற்குழு உறுப்பினர் டைலர் குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது அன்பழகன் அவர்கள் முன்னிலை வகித்தார் வாரியர் நகர், பாண்டியன் நகர், டீச்சர்ஸ் காலனி உட்பட சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அவர்களின் கையால் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந் தேறியது 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது 100 நபர்களுக்கு சுமங்கலி பொருட்கள் வழங்கப்பட்டது இதில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் யுவன் அணிஷ் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக