பழங்குடியின இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் வழிகாட்டி பயிற்சி நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 ஜனவரி, 2025

பழங்குடியின இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் வழிகாட்டி பயிற்சி நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்பு.


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியின இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டி பயிற்சி நிகழ்ச்சி திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில்  நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜவ்வாது மலை ஏலகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் ஏராளமான பழங்குடியின இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெரும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.  


இந்நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த  200க்கும் மேற்பட்ட பழங்குடியின இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வேலை வய்ப்பு திறன் பயிற்சியில் இணைய விண்ணப்பித்தனர். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன மெக்கானிக்கல், துணை செவிலியர் உள்ளிட்ட 24 பயிற்சிகள் நடைபெற உள்ளது. இப்பயிற்சிகளில் இணையும் பழங்குடியின இளைஞர்களுக்கு மாதம் 6000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது. மேலும் அவர்களுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு ஆகியன  முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


பழங்குடியின இளைஞர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் அரசு இந்த நல்வாய்ப்பு  வழங்கியுள்ளது. இதை மிகச் சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என பழங்குடியின இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பதிலளித்தனர்.


இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் முன்னாள் சேர்மன் அரசு ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் கந்திலி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ்  துறை சார்ந்த அரசு அலுவலர்கள், உள்ளாட்சித் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பழங்குடியின மக்கள் பங்கு பெற்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad