உளுந்தூர்பேட்டையில் வட்டார வள மையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 ஜனவரி, 2025

உளுந்தூர்பேட்டையில் வட்டார வள மையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வட்டார வள மையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.


இதில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் எலவனாசூர்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு மாற்றுத்திறன் உடைய மாணவர்களுக்கு கண், ரத்த அழுத்தம், சர்க்கரை, இருதயம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அதில் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட 23 மாற்றுத்திறனாளிகளை மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர், அவர்களுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்க அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த முகாமில் உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad