மணலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 ஜனவரி, 2025

மணலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.


மணலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக திருமதி.ரேவதி ஜெய்கணேஷ் மணலூர்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர்  தலைமை தாங்கினார் 


தமிழ் தாய் வாழ்த்து முதன் முதலாக பாடப்பட்டு திரு. ஸ்டாலின் ஆசிரியர் அவர்கள் பள்ளியின் ஆண்டு அறிக்கை வாசித்தார், விழாவில் PTA தலைவர் நாட்டார் தெய்வசிகாமணி மற்றும் உறுப்பினர்கள் SMC தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சிவா மற்றும் அரிமா சங்க தலைவர் பள்ளி மேலாண்மை குழு கல்வி ஆர்வலர் ஆகிய சரவணன் மற்றும் வர்த்தக சங்கத் தலைவர் அம்மு ரவிச்சந்திரன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு முன்னாள் தலைவர் சந்திரமோகன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சாந்தா சக்கரவர்த்தி, மணிகண்டன் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


விழாவில் மாணவர்கள் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியை ஆசிரியர் பெருமக்கள் தொகுத்து வழங்கினர் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது, நன்றி உரை திரு ரவி ஆசிரியர் அவர்கள் கூறி தேசிய கீதம் பாடப்பட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad