கடலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் ஆண்டு தோறும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி, வறுமையில் உள்ள குடும்பங்களில் மற்றும் குடும்பங்களில் உள்ள இளைஞர்களை கண்டறிந்து /அவர்களுக்கு இப்படிப்பட்ட வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி, முன்னனி தனியார் நிறுவனங்களை வரவழைத்து இளைஞர்களுக்கு அவர்களுக்கு வேலை வாய்ப்பை அவர்களின் தகுதிக்கேற்ப பெற்றுத் ஏற்படுத்தி கொடுத்துக் கொண்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு (2024-25) 25.01.2025-ம் தேதி, கடலூர் மாவட்டம், வடலூர், வள்ளலார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்து, 103-க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள் கலந்துகொண்டனர். அதில் 1475-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, 300-க்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் பணி ஆணை வழங்கப்பட்டது மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக