இதுகுறித்த காவல்துறை விசாரணையில், வீரட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த செல்வராசு என்பவரின் மகன் கதிர்காமன்(43). இவர் அக்கிராமத்தின் அதிமுக கிளை பொருளாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கதிர்காமன், அவரது நண்பர்கள் முன்னாள் ராணுவ வீரர் பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் அக்கிராமத்தின் அருகாமையில் உள்ள முந்திரி தோப்பில், மது அருந்தி கொண்டிருந்துள்ளனர்.
அப்போது பாலகிருஷ்ணனுக்கும், கதிர்காமனுக்கும் வாக்குவாதம், தகராறு ஏற்பட்ட நிலையில் மற்றொரு நண்பரான பிரபாகரன் அங்கிருந்து வெளியேறி உள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் பாலகிருஷ்ணன் கதிர்காமனை பீர் பாட்டிலால் கடுமையாக தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர், முந்திரி தோப்பில் கிடந்த சுள்ளிகளை பொறுக்கி, கதிர்காமனின் உடல் மீது போட்டு தீயிட்டு கொளுத்துவிட்டு பாலகிருஷ்ணன் உடனடியாக அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். இது குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் இவர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்த பிரபாகரனை பிடித்து அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட கதிர்காமனுக்கு ஜெயக்கொடி என்ற மனைவியும், சந்தியா, சந்தோஷ் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதிமுக கிளை பொறுப்பாளர், முந்திரி தோப்பில் பாதி உடல்கள் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக