ஒவ்வொரு ஆண்டும் சனவரி முதல் வாரத்தில் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் முன்னிலையில் விழிப்புணர்வு வாகன பேரணியை தொடங்கி வைத்தனர்.
இதில் மாவட்ட அரசு அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை எடுத்துக் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக