பற்பல ஊர்களில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் வசதிக்காக பல வசதிகளை கோவில் வளாகத்தில் செய்து வருகிறது.
இருப்பினும் பாத யாத்திரையாக வருகிறவர்கள் பெரும்பாலும் காலை கடன்களை கழிக்கும் விதமாகவும், குளிக்கவும் தாமிரபரணி ஆற்று பகுதிகளையும், வேறு சில நீர் நிலைகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் காலரா போன்ற நோய் தொற்றும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இது தவிர பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள், வழியில் இயற்கை உபாதை கழிக்க பொது இடங்களையே பெரும் பாலும் பயன்படுத்துகின்றனர்.
ஓவ்வொரு ஆண்டும் ஜனவரி தொடங்கி டிசம்பர் மாதம் வரை பல முறை இது போன்ற நிகழ்வு ஏற்படுகிறது. பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் விட்டு செல்லும் கழிவுகளை அப்புறப்படுத்துவது இது வரை கேள்வி குறையாகவே உள்ளது.
திருச்செந்தூர் கோவிலை சுற்றி சுத்தம் செய்ய பணியாளர்களை கோவில் நிர்வாகம் சார்பில் நியமித்து செய்து வருகிறது. ஆனால் பக்தர்கள் வரும் சாலை ஓரங்களை அந்தந்த பகுதி ஊராட்சி நிர்வாகம் துப்புரவு செய்வது அபரிமிதமாக உள்ளது.
இனியும் இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இப்பகுதியில் பல நோய் கிருமிகள் உருவாகி பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும் என்று இயற்க்கை ஆர்வலர்களும், பொது நல ஆர்வலர்களும் அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக