அமைச்சர் வீட்டின் முன்பு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சேர்மன் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் அப்பகுதியில் பரபரப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 ஜனவரி, 2025

அமைச்சர் வீட்டின் முன்பு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சேர்மன் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் அப்பகுதியில் பரபரப்பு!

அமைச்சர்  வீட்டின் முன் அடித்துக்கொண்ட  சேர்மன் மற்றும் ஒன்றிய செயலாளர்


காட்பாடி ,ஜன 13 -

வேலூர் மாவட்டம் காட்பாடி அமைச்சர் வீட்டின் முன் சேர்மன் மற்றும் ஒன்றிய செயலாளர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.அரசு பொருட்காட்சி திறப்பு விழாவுக்கு காட்பாடி இல்லத்திற்கு வந்த நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளரு மான துரைமுருகன் இல்லத்தின் முன்பு மோதிக்கொண்ட காட்பாடி ஒன்றிய குழு சேர்மன் மற்றும் ஒன்றிய செயலாளர்
காட்பாடி ஒன்றிய குழு தலைவராக இருப்பவர் வேல்முருகன் மற்றும் 
காட்பாடி தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் கருணாகரன்.இந்நிலையில் நேற்று வேலூர் வந்திருந்த அமைச்சரை காண்பதற்காக கட்சிக்காரர்கள் வீட்டின் முன்பு   இருந்தனர் நேற்று மாலை அமைச்சரை பார்ப்பதற்காக இருவரும் வந்திருந்தனர். அந்த சூழ்நிலையில் அமைச்சரின் வீட்டின் முன் திடீரென்று வேல்முருகன் மற்றும் கருணாகரன் ஒருவரை ஒருவர் சட்டை பிடித்து அடித்து தாக்கிக் கொண்டனர். அப்பொழுது கருணாகரன், வேல்முருகனை பார்த்து என்னை அடிக்கிறாயா? என்ன அடிச்சு கொன்று விடுவாயா? அடிச்சு பொதைத்து விடுவாயா? என்னிடம் நடக்காது. 
இதை பெங்களூருவில் வைத்துக்கொள் என்று தாறுமாறாக பேச ஆரம்பித்தார். 
அப்போது அங்கிருந்த கட்சிக்காரர்கள் அவர்கள் இருவரையும் விலக்கி சமாதானபடுத்தி அழைத்துச் சென்றனர். 
ஆனாலும் அமைச்சர் வீட்டுக்கு உள்ளே அழைத்து சென்று அமரவைத்த பின்பும் கருணாகரன், வேல்முருகனை பார்த்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். விசாரித்ததில் வேல்முருகனிடம், கருணாகரன் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது ஒரு கோடி ரூபாய் கடன்  பெற்றதாக கூறப்படுகிறது.
அதில் சுமார் 70 லட்சம் வரை திருப்பி கொடுத்து விட்டதாகவும், மீதி 30 லட்சத்தை கேட்ட பொழுது வேல்முருகனை உன்னால் என்ன செய்ய முடியுமோ? செய்து கொள் என்று கருணாகரன் தாறுமாறாக பேசியதால் இருவருக்கும் இடையே மோதல் நடந்ததாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக அமைச்சர் இருவரையும் அழைத்து எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.


காட்பாடி வள்ளிமலையை சேர்ந்த வேல்முருகன் பெங்களூருவில் ஆயில் பிசினஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கட்சிப் பணியில் எந்த தொடர்பும் இல்லாத அவரை  வேலூர் எம்பி கதிர் ஆனந்த்  அழைத்து நேரடியாக அவருக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு கொடுத்து  ஒன்றிய குழு சேர்மனாகவும் ஆக்கிவிட்டார் என்று
அதிருப்தியும் கட்சிக்காரர்களிடம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கருணாகரன் மீதும் உள்ளாட்சி பிரமுகராக இருந்தபோது ஏரியில் வண்டல் மண் எடுப்பதில் பல கோடி ரூபாய் கொள்ளை அடித்ததாகவும் கட்சிக்காரர்களை எந்த வகையிலும் கவனிக்கவில்லை என்ற குற்றசாட்டும் கூறப்படுகிறது. மேலும் வேல்முருகனின் அடாவடித்தனமும் கட்சிக்காரர்களை மதிக்காதது மூத்தவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
இந்த பிரச்சனை இப்படி இருக்க நேற்று
அமைச்சரை பார்த்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதற்காக வந்திருந்த கட்சிக்காரர்கள் முன்னிலையில்  இவர்கள் இருவரும் மோதி கொண்ட விவகாரம் முகச்சுளிப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad