நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு.

நெல்லையப்பர் கோயில் யானை உயிரிழப்பு.

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி வயது 54 உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த யானை தற்போது உயிர் இழப்பு . 

யானை சிகிச்சை சிகிச்சை பெற்று வந்தது சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டது நெல்லையப்பர் கோயில் யானை சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 12.01.2025 காலை சிகிச்சை பலனளிக்காமல் நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி 54 உயிரிழந்துவிட்டது.
நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ...

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் யானையான காந்திமதிக்கு வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவக்குழு யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

பல ஆண்டுகளாக மூட்டுவலியால் அவதிப்பட்ட யானை காந்திமதி கடந்த ஒரு மாதத்திற்கு மேல் நின்றபடியே உறங்கி வந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கீழே படுத்த யானை மூட்டு வலியால் எழ முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கிரேன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை யானை இறந்த செய்தி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad