சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 17 ஜனவரி, 2025

சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா


சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா


சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 15-ம் ஆண்டுவிழா  நடைபெற்றது.பள்ளி தாளாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். பள்ளியின் துணைத்தலைவர் மகேந்திரன், செயலாளர் சுகந்திபட்டுராஜன், துணைச்செயலாளர் பிரபாகரன், பொருளாளர்  ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இவ்விழாவில் மாணவ, மாணவிகளின் நடனம், பரதநாட்டியம், நாடகம்,யோகா போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், பரிசு வழங்கி பாராட்டினர். இதில் ஒருங்கிணைப்பாளர் சாப்ஜான், இயக்குனர்கள் ஜெயக்குமார், பால்ராஜ், சாரதாரமேஷ்பாபு, கலைச்செல்வி குணசேகரன், பள்ளி முதல்வர் சுந்தரபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள், ஜெயம் குழு உறுப்பினர்கள்,ஊழியர்கள்,பெற்றோர்கள்,மாணவ,மாணவிகள்  கலந்து கொண்டனர்.


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad