அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 ஜனவரி, 2025

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு !

சேர்க்காடு அரசு கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு!


காட்பாடி , ஜன 9 -

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் சேர்க்காடு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட 7 நாள் சிறப்பு முகாம் நிறைவு விழா சேர்க்காடு ஊராட்சியில் உள்ள பெருமாள் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. 

கல்லூரி முதல்வர் முனைவர் அ.மு. சரவணன் தலைமை வகித்தார். பேரா. பா.உமா முன்னிலை வகித்தார். முனைவர் இ.இளவரசி அனைவரையும் வரவேற்றார்.  திட்ட அலுவலர் ஆ.ரூபா தொகுப்புரையாற்றினார்.
இவ்விழாவில் சேர்க்காடு ஊராட்சி மன்றத் தலைவர்  பத்மநாபன், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப் பாளர் முனைவர் செ.விஜய்ஆனந்த் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கி பாரட்டினார். 


இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை அவைத்தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் ஜெயின் அறக்கட்டளையின் இயக்குநர் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
துணைத்தலைவர்,  அனிதா சிவா, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் நாட்டு  நலப்பணித்திட்ட நிரலர் சதிஷ் மற்றும் பள்ளிகொண்டா வனச் சரக அலுவலர் வேல்முருகன், பாலாஜி போன்றோர் கலந்து கொண்டனர். 
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் ஆ.ரூபா நன்றி கூறினார்.
வேலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையில் இருந்து திரு முருகேசன் மற்றும் திரு. நா.பாலாஜி ஆகியோர் தீ பரவும் விதம் அவற்றை பாதுகாக்கும் முறை மற்றும் முதல் உதவி தொடர்பாகவும் சிறப்புரை வழங்கினர்.
தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் க.சசிகலா, திருவள்ளுவர் பல்கலைக்கழ தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் க.சிங்காரவேலு, சேர்க்காடு கிராமத்தின் மேகநாதன் பிரிடம் சிட்டி லயன்ஸ் கிளப் வேல்முருகன் மற்றும் உதய குமார் முத்துரங்கம் அரசு கல்லூரியின் விலங்கியல் துறைப் பேராசிரியர் முனைவர் பாரதிராஜா ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad