பூவந்தி பகுதியில் போதைக்கு அடிமையாகி மனநோயாளியாக இருந்து வந்த தனது மகன் காணவில்லை என்று தந்தை போலீசில் புகார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் பூவந்தி காலனி பகுதியில் சேர்ந்தவர் பிச்சை மகன் ஆறுமுகம் (56). இவர் மதுரைக்கு சென்று வீடு திரும்பிய போது இவருடைய இரண்டாவது மகன் குருபிரசாத் (29) வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடியும் தனது மகன் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது மகன் போதைக்கு அடிமையாகி மனநோயாளியாக வீட்டில் இருந்து மருந்து மாத்திரைகள் வரும் நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குருபிரசாந்தை தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக