'யாருடா என் மேல எப்ஐஆர் போட அனுமதி கொடுத்தா' - சார்பு ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் சார்பு ஆய்வாளர் திரு சிவப்பிரகாஷ். இவர் தனது காவல்நிலைய அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கருப்பையா மகன் கோபால் (47) என்ற வழக்கறிஞர் காவல் நிலையம் சென்று சிவப்பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டு அசிங்கமாக ஒருமையில் பேசியதோடு அவரைத் தாக்கி குளம் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் வழக்கறிஞர் கோபால் மீது திருப்புவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் வழக்கறிஞர் கோபால் அவர்களின் மனைவி ரோகினி மானாமதுரை காவல் கண்காணிப்பாளருக்கு தனது கைப்பட கடிதம் எழுதிய மன்னிப்பு கடிதத்தை அளித்துள்ளார்.
அக்கடிதத்தில் தனது கணவர் கோபால் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், உரிய சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும், காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து தான் மிகவும் வேதனை அடைவதாகும், இது போன்ற சம்பவம் வருங்காலங்களில் நடக்க விடமாட்டேன் என்றும் தான் உறுதியளிப்பதாகவும், நடந்த சம்பவத்திற்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக