கோத்தகிரி மார்க்கெட் முன்புறமும் வேகத்தடையை சரி செய்வது மிக அவசரம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 ஜனவரி, 2025

கோத்தகிரி மார்க்கெட் முன்புறமும் வேகத்தடையை சரி செய்வது மிக அவசரம்.

 


கோத்தகிரி மார்க்கெட் முன்புறமும் வேகத்தடையை  சரி செய்வது மிக அவசரம்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் முதல் பேருந்து நிலையம் வரை பள்ளிகள் உள்ள இடத்தில் வேகத்தடை இருந்தது. 


இந்திய ஜனாதிபதி அவர்களின் நீலகிரி வருகை காரணமாக அவசர கதியில் அகற்றப்பட்டது. 


அதிக காலம் ஆகியும் சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை.


பள்ளி குழந்தைகளின் நலன் கருதி ஏதாவது ஒரு அசம்பாவிதம்  நடக்கும் முன் போர்க்கால அடிப்படையில் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் முதல் பேருந்து நிலையம் வரை உள்ள வேகத்தடைகளை சீரமைக்க வேண்டும் என தமிழக குரல் செய்தி வெளியிட்டு அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்றது. 


இரண்டு பள்ளிகள் உள்ள இடத்தில் வேகத்தடை சீரமைக்கப்பட்டது.‌ 


பெற்றோர்கள்  அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக குரலுக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தனர். 


ஆனால்  மற்றும் ஒரு பள்ளி மற்றும் வாகன நெரிசல் உள்ள கோத்தகிரி மார்க்கெட் மெயின் கேட்  முன்புறமுள்ள வேகத்தடை சீரமைக்கப்படவில்லை.


நேற்றைய தினம் கட்சி கொடியுடன் வந்த கார் ஒரு மாற்றுத் திறனாளி பெண் ஒட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது மோதி அந்த பெண்மணிக்கு காயம் ஏற்பட்டது சுற்றியிருந்தவர்கள் மீட்டு இடித்த  அதே கட்சிக் கொடி வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த அசம்பாவிதம் பற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை தொடர்புக்கொண்டு விவரத்தை தமிழக குரல் தெரிவித்தது.


உடனடியாக நடவடிக்கை எடுத்து  கோத்தகிரி மார்க்கெட் முன்புறமுள்ள பள்ளி இருக்கும் இடத்தில் உள்ள வேகத்தடையை  சீரமைப்பதாக உறுதியளிதுள்ள நிலையில் அவசர அவசியமாக கோத்தகிரி மார்க்கெட் மெயின்கேட் முன்புறமுள்ள வேகத்தடையை சீரமைக்க வேண்டும் என்பது பெற்றோர்கள் பொதுமக்கள் மற்றும் தமிழக குரலின் கோரிக்கையாகும்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad