ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் பொங்கல் விழா.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தி லிட்டில் பிளவர் பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் முன்னிலை வகித்தார். பள்ளியின் செயலாளர் மாத்யூ ஜோயல், நிர்வாகி தமயந்தி ஆகியோர் பொங்கல் விழாவின் சிறப்புகளை குறித்து பேசினார்கள் பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்று சிறப்புரையாற்றினார்.
விழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான குலை குலையாய் முந்திரிக்காய், பூப்பறிக்க வருகிறோம், பந்து எறிதல் ,கிளி தட்டு, உயிர் சிலை, கயிறு இழுத்தல், கரும்பு தோல் உரித்தல், உறியடித்தல் போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மஞ்சள் இட்ட புது பானையில் புத்தரிதரிசியிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்கள் .மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பூமா, கவிதா, ராகினி, பாண்டி செல்வி,திவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக