திருச்செந்தூர் கோவில் அருகே கடல் அரிப்பை வல்லுநர் குழுவினர் ஆய்வு விரைவில் தடுப்பு பணிகள் தொடங்க ஏற்பாடு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 ஜனவரி, 2025

திருச்செந்தூர் கோவில் அருகே கடல் அரிப்பை வல்லுநர் குழுவினர் ஆய்வு விரைவில் தடுப்பு பணிகள் தொடங்க ஏற்பாடு.

திருச்செந்தூர் கோவில் அருகே கடல் அரிப்பை வல்லுநர் குழுவினர் ஆய்வு விரைவில் தடுப்பு பணிகள் தொடங்க ஏற்பாடு.

திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில், சில மாதங்களாக மண் அரிப்பு ஏற்பட்டு, பக்தர்கள் புனித நீராட முடியாத நிலை உள்ளது. கோவில் முன், 500 அடி நீளத்திற்கு, 7 அடி ஆழத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அங்கு யாரும் சென்றுவிடாதபடி கரையில் கம்புகளை கட்டி தடுப்பு வேலி அமைக்கப் பட்டுள்ளது. கடற்கரையில் மண் அரிப்பு பிரச்னையை தடுக்கும் வகையில், 18 கோடி ரூபாய் செலவில் பணிகளை மேற்கொள்ள சென்னை ஐ.ஐ.டி., அதிகாரிகள் குழுவினர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். 

கடலில், 160 மீட்டர் நீளத்திற்கு அலை தடுப்புச்சுவர் அமைக்கவும், 700 மீட்டர் நீளத்திற்கு மணல் கொண்டு செயற்கையாக கடற்கரை உருவாக்கவும் ஐ.ஐ.டி., பரிந்துரை செய்துள்ளனர். 

இந்நிலையில் கனிமொழி எம்பி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் குழுவின்ர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடல் அரிப்பு பகுதியை ஆய்வு செய்தனர். 

இதனை தொடர்ந்து சென்னை யில் இருந்து வந்த இந்திய தொழில்நுட்ப கழக வல்லுநர் குழுவினர் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் இன்று ஆய்வு பணி மேற்கொண்டனர். நாளை காலை மற்றொரு குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். 

ஆய்வுக்கு பின் இந்தக் குழுவினர் அளிக்கும் அறிக்கையினை தொடர்ந்து கடல் அரிப்பு தடுப்பு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad