நம் நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவினை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு விழா அணிவகுப்புக்கும் சென்னை மெரினாவில் நடைபெறும் குடியரசு விழா அணிவகுப்புக்கும், அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து 2361 தேசிய மாணவர் படை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் காரைக்குடியில் உள்ள ஒன்பதாவது பட்டாலியனைச் சார்ந்த அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு இளங்கலை வரலாறு பயிலும் தேசிய மாணவர் படை மாணவி ஜீவகப்பிரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் சார்பாகவும் காரைக்குடி ஒன்பதாவது பட்டாலியன் சார்பாகவும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க உள்ளார். அதுபோல சென்னை மெரினாவில் நடைபெறும் குடியரசு தின விழா அணி வகுப்புக்காக, அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு இளங்கலை வணிகவியல் பயிலும் தேசிய மாணவர் படை மாணவி நிர்மலா தேவி தேர்வு செய்யப்பட்டு பங்கேற்க உள்ளார். அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் சார்பாக டெல்லியிலும் சென்னையிலும் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள தேசிய மாணவர் படை மாணவிகளை கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி கல்லூரியின் தேசிய மாணவர் படை பொறுப்பாளர் முனைவர் சரவணன் மற்றும் பேராசிரியர்களும் ஆசிரியரல்லாப் பணியாளர்களும் பாராட்டி வாழ்த்தினர்.
Post Top Ad
வெள்ளி, 24 ஜனவரி, 2025
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் தேர்வு
Tags
# சிவகங்கை
About SUB EDITOR THAMILAGA KURAL
சிவகங்கை
Tags
சிவகங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக