தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து மடல்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 11 ஜனவரி, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து மடல்கள்.



தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து மடல்களை சேலம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அனுப்பி உள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப. அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் வழங்கினார்.


 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து மடல்களை சேலம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அனுப்பி உள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப. அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம்  (10.01.2025) மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்கினார்கள்.


 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிரின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், மகளிர் விடியல் பயணத் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மகளிர் முன்னேற்றத்திற்கான குறிப்பிடத்தக்கத் திட்டங்களாகும்.


மேலும், மகளிரின் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக அளவிலான கடனுதவிகளை வழங்கி அவர்களை சுய சார்போடு சமுதாயத்தில் திகழச் செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள மகளிர் 乐山 உதவிக்குழுவினருக்கு 2024 2025ஆம் ஆண்டில் பல்வேறு தொழில்கள் தொடங்கிடவும், ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்தவும் ரூ.1.602 கோடி கடனுதவிகள் வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, தற்போதுவரை ரூ.1,198.84 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.பொங்கல் திருநாளையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அனுப்பியுள்ள புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து மடல்களை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் வழங்கும் வகையில் இன்றையதினம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ.ஆ.ப. அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் வழங்கினார்கள்.


இதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புரத்தைச் சேர்ந்த சுமார் 2.50 இலட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சென்று சேரும் வகையில் 21200 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து மடல் வழங்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad