உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் பரிசோதனை செய்யும் இடத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் துவங்கியது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஜனவரி, 2025

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் பரிசோதனை செய்யும் இடத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் துவங்கியது.

 


உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் பரிசோதனை செய்யும் இடத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் துவங்கியது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில்  உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் தொடங்கி நடைபெறுவது வழக்கம்.


இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது தைப்பொங்கல் அன்று ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கானது அடுத்தடுத்து நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக மதுரை மாநகராட்சி சார்பாக 54 லட்சத்து 26 ஆயிரத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.


அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக இன்று காலையில் முகூர்த்தககால் அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி மேயர் ஆணையாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் நடப்பட்டது.


இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக கால்நடை பரிசோதனை மையத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணியானது தொடங்கியுள்ளது.


தொடர்ந்து விழா மேடை , குடிநீர் மேடை அமைப்பது, சாலை இருபுறமும் பார்வையாளர்களை தடுக்கும் வேலி, சாலையை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான பணிகள் நடைபெற உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad