திருமங்கலம் அருகே தடுப்பு சுவரில் மோதிய பேருந்து.15பேர் காயம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ராஜபாளையத்திலிருந்து மதுரை நோக்கி தனியார் பேருந்து வந்து 80 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே பெட்ரோல் பங்க் முன்பு உள்ள தடுப்பு சுவரில் சென்டர் மீடியேட்டரில் மோதியது இதில் எட்டு பெண்கள் உட்பட 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த திருமங்கலம் போலீசார் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருமங்கலம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக