நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இளையான்குடி நன்னியாவூரில் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி தெற்கு ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சி நன்னியாவூர் கிராமத்தில் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர், திமுக கழக துணைப் பொதுச் செயலாளர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழாவில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர். செல்வராஜன், 13வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் மலையரசி ரவிச்சந்திரன், ஊராட்சிமன்ற தலைவர் தமிழ்மணி, தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பா. தனசேகரன், மாவட்ட பிரதிநிதி பி. ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி தயாளன், கிளைச் செயலாளர் தங்கச்சாமி மற்றும் புதுக்கோட்டை ஊராட்சி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக