சிறுத்தை அடித்து ஒருவர் பலி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஜனவரி, 2025

சிறுத்தை அடித்து ஒருவர் பலி


சிறுத்தை அடித்து ஒருவர் பலி        


நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதிக்கு உட்பட்ட எடக்காடு பாத கண்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் இவர் கூலி வேலை செய்பவர் இவர் வேலை முடித்து இன்று மாலை வீடு திரும்பும் போது சிறுத்தை அடித்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் 


இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிக அச்சமடைய வைத்துள்ளது. அங்கு ஏற்கனவே சிறுத்தை நடமாட்டம் உள்ளது என்றும் இதனால் மக்கள் தோட்டத்திற்கும் வேலைகளுக்கும் செல்ல அச்சுறுத்தலாக இருந்தது எனவும் இதற்கு முன்பே தெரிவித்துள்ளனர் என்று மக்கள் கூறுகின்றனர். இன்று மாலை இச்சம்பவம் நடந்ததால் இன்னும் அதிக அளவில் அச்சுறுத்தலுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகியுள்ளனர். 


இதற்கு சம்பந்தப்பட்ட  சம்பந்தப்பட்ட வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நல்லதொரு வழி கூற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad