அஇஅதிமுக சிவகங்கை மாவட்ட செயலாளரை மாற்ற கோரி மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஜனவரி, 2025

அஇஅதிமுக சிவகங்கை மாவட்ட செயலாளரை மாற்ற கோரி மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 அஇஅதிமுக சிவகங்கை மாவட்ட செயலாளரை மாற்ற கோரி மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் திரு எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் அணியில் உள்ள கட்சி நிர்வாகிகளிடையே புதிதாக குழப்பங்கள் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான திரு பி. ஆர். சொந்தில்நாதன் அவர்களை மாற்ற கோரி அவருக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிவகங்கை மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளதால் சிவகங்கை மாவட்ட அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


குறிப்பாக அச்சுவரொட்டியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்கப்படாமல், சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட சிவகங்கை, மானாமதுரை மற்றும் காரைக்குடி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பாஜகவிற்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்திற்கு அதிமுகவை படுகுழியில் தள்ளிய மாவட்ட செயலாளர் அவர்களை மாற்றக்கோரி பகிரங்கமாக சிவகங்கை மாவட்ட அதிமுகவின் உண்மை விசுவாசிகளால் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad