உயிர்காக்கும் அவசர வாகனங்கள் பிற பகுதிகளுக்கு வெளியேறி செல்வதற்கு ரயில் தண்டவாள கிராசிங்களில் மேம்பாலம், சுரங்கப்பாதை அமைத்திட பொதுமக்கள் வலியுறுத்தல்.
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரையானது தமிழக அரசால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மானாமதுரை ரயில் நிலையமானது அருப்புக்கோட்டை, ராமேஸ்வரம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய ரயில் நிலையங்களை இணைக்கும் ரயில் நிலைய சந்திப்பாக இயங்கி வருகிறது. மானாமதுரை பிரதான நகர் பகுதிகளில் தான் அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனைகள் இயங்கி வருகிறது. மேலும் மானாமதுரை அரசு மருத்துவமனையிலிருந்து பிரதான நெடுஞ்சாலை வழியாகத் தான் மதுரை அரசு மருத்துவமனைக்கோ, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கோ ஆம்புலன்ஸ் மூலமாக அவசர சிகிச்சைகளுக்கு செல்லவேண்டும்.
இந்நிலையில் மானாமதுரை மற்றும் அதன் பிரதான நகர் பகுதிகளை சுற்றி குறிப்பாக மானாமதுரை ரயில் சந்திப்பு முதல் மேலகொன்னக்குலம் ரயில் நிலையம் வரை ஆறு கிலோமீட்டருக்கு மட்டும் சுமார் 5 ரயில் தண்டவாள கிராசிங் கேட்டுகள் உள்ளன.
இதில் அவசர சிகிச்சைக்கு செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் மற்றும் இன்னும் பல இதர அவசர தேவைகளுக்கு செல்லும் பிர வாகனங்கள் மானாமதுரையை விட்டு உடனடியாக வெளியேறுவதற்கு ஒரு மேம்பாலம்மோ, சுரங்கப்பாதையோ மானாமதுரை சந்திப்பு ரயில் நிலையம் அமையப்பெற்றது முதல் இன்று வரை மேம்பாலம் மற்றும் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுதல்கள் அமையாமல் இருப்பது வியப்புத்தான்.
ஆயினும் மானாமதுரை நகராட்சி பகுதி செட்டியார் தெருவில் மயானத்திற்கு செல்லும் சுரங்கப்பாதை இருப்பது என்னவோ உண்மைதான், ஆனால் அச்சுரங்கப்பாதையை உபயோகப்படுத்தி ஆம்புலன்ஸ் எவ்வாறு சிவகங்கை மற்றும் மானாமதுரை அரசு மருத்துவமனையை சென்றடைய முடியும்? மாற்றாக அமைக்கப்பட்ட அச்சுரங்க பாதையை ஏதாவது ஒரு ரயில் தண்டவாளத்தை கடக்க உபயோகம் உள்ள ரயில் தண்டவாள கிராசிங் கேட்ட அருகில் அமைத்திருந்தால் பொதுமக்களுக்கு உபயோகமாக அமைந்திருக்கும் அள்ளவா? இதிலிருந்து தெரியவருவது ஒன்றே ஒன்று என்னவென்றால் எந்த அளவுக்கு பொதுமக்கள் உயிர்மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் அளவுகடந்த அக்கரை மற்றும் கவனம் செலுத்தி வருகின்றன என்பது இதிலிருந்து தெள்ளத்தெளிவு.
எத்தனை லட்சக்கணக்கான கோடிகள் கடன் வாங்கும் அரசுகள், எத்தனை கோடிகளில் வரி வசூல் செய்துவரும் அரசுகள் பொதுமக்களின் உயிரில் கடுகளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது ஏன்? இன்னும் இதுபோல் தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்களில் எத்தனை ரயில் தண்டவாள கேட்டுக்களினால் ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் நடந்து வருகிறது என்பது பொதுமக்களின் வரியில் இயங்கும் அரசாங்கத்திற்கே வெளிச்சம்.
எனவே நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களுக்கு மத்தியில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற பொதுமக்களின் அவசர பாதுகாப்பு மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, அவள நிலையை மாற்ற இந்திய தென்னக ரயில்வே நிர்வாகம், ரயில்வே கோட்ட ஆலோசனை குழு, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் தலையிட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்திட உடனடியாக இதற்காக தக்க தீர்வை மேற்கொண்டு, குறைந்தபட்சம் ஏதாவது ஒரு சாத்தியக்கூறு உள்ள இடத்திலாவது மேம்பாலம்மோ சுரங்கப்பாதையோ அமைத்துதர மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக