மானாமதுரையில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப பக்தர் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற கன்னிபூஜை மற்றும் அன்னதானத்தில் பங்கேற்ற பக்தகோடி பெருமக்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஜனவரி, 2025

மானாமதுரையில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப பக்தர் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற கன்னிபூஜை மற்றும் அன்னதானத்தில் பங்கேற்ற பக்தகோடி பெருமக்கள்.

 




மானாமதுரையில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப பக்தர் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற கன்னிபூஜை மற்றும் அன்னதானத்தில் பங்கேற்ற பக்தகோடி பெருமக்கள்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை - தாயமங்கலம் சாலையில் உள்ள கோபால் இந்திரா திருமண மஹாலில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக அனுமந்த ஜெயந்தியை முன்னிட்டு கன்னிபூஜை மற்றும் அன்னதானம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சீனியப்பா இம்ரன் டிரேடிங்ஸ் தொழிலதிபர் என் சுரேஷ் மற்றும் தொழிலதிபர் கோபால் இந்திரா மஹால் தொழிலதிபர் கோபால் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். 


மேலும் கன்னி பூஜை மற்றும் அன்னதானத்தில் ஐயப்ப பக்தர்கள் ஆஞ்சநேயர் பக்தர்கள் முருக பக்தர்கள், சுற்று வட்டார பகுதியில் உள்ள பக்தகோடி பெருமக்கள் பங்கேற்று அருள் பிரசாதம் பெற்றுச் சென்றனர். வருகின்ற ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்ரீ நிரதலமுடைய அய்யனார் சோனியா சுவாமி ஆலயத்தில் இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை தொடங்க பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad