கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கு மக்கள் போற்றும் மாணிக்கம் விருது வழங்கப்பட்டது
01-01-2025 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 2025-புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு திரு அதிமான் ராஜா அவர்கள் நடத்தும் அதியமான் அறக்கட்டளை சார்பாக கலை நிகழ்ச்சி 10- ஆம் ஆண்டு நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவி மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில் திருமதி R.M.S.K #அர்ச்சனா_காமராஜன் #ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கு
!!!..மக்கள் போற்றும் மாணிக்கம்..!!!
எனும் விருதினை விஜய் டிவி பட்டிமன்ற நடுவர் எழுத்தாளர் மற்றும் திரைப்பட காமெடி நடிகர் மதுரை முத்து M.Com அவர்களுடன் தமிழ்த்திரு அதியமான் அறக்கட்டளை நிறுவனர் ம.இராஜா M.A.,B.Ed., அவர்கள் வழங்கினார்* இதற்கு உறுதுணையாக இருந்த நிறுவனத்திற்கும் எனக்கு இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த ரங்கப்பனூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னோடு பயணிக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் என் அன்பான நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிரேன்...
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக