வணிகர்கள் மகாஜன சங்க கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 6.1.2025 முதல் இரவு 11 மணிக்கு கடைகள் அடைக்க பட வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட புதிய காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதை குமரி மாவட்ட வணிகர்கள் மகாஜன சங்கம் மனதார வரவேற்கிறது.இந்த அறிவிப்பு இரவு நேரங்களில் சமூக விரோத குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் வீணாக இரவு நேரங்களில் சுற்றித்திரிபவர்கள் மற்றும் இரவு நேரங்களில் அதிவேகமாக இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்துகள் ஏற்படுத்தி கொண்டு இருக்கும் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களுக்கும் பயம் ஏற்படும்.இதன் மூலம் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும் என்பதாலும் பொது மக்கள் அச்சம் பயம் இல்லாமல் நிம்மதியாக வாழ வழி வகுக்கும். எனவே இந்த நல்ல காரியத்தை செயல் படுத்திய கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களை கன்னியாகுமரி மாவட்ட வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் பாராட்டி நன்றியும் தெரிவித்துக் கொண்டார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக