தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மக்கள் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்து வழிபடுவர்.
பொங்கல் பண்டிகை ஒட்டி பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெற்றது.
பள்ளி முதல்வர் லிங்கராஜன் தலைமை வகித்தார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பாரம்பரிய உடை அணிந்து மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டியில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆனந்த ராமச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக