முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு தினமும் தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
2025ம் ஆண்டு புத்தாண்டு முதல் கடந்த 10 நாள்களாக கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது .
இந்நிலையில் இன்று சென்னை திருவெற்றியூர் சபரிமலை யாத்திரை குழு ஒருங்கிணைப்பாளர் ஜெகன் மற்றும் குழுவை சேர்ந்த நிர்வாகிகள் ராம்குமார், உதயா, மணிகண்டன் ஆகியோரின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருச்செந்தூர் வருகை தந்தனர்.
அவர்கள் கடலில் நீராடி கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் வருகை தந்த பக்தர்களுக்கு உடன்குடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலசிங் ஏற்பாட்டில் காலை உணவு வழங்கப்பட்டது.
இதில் உடன்குடி மேற்கு ஒன்றிய திமுக துணை செயலாளர்கள் சுடலை கண், இசக்கிமுத்து ஐயோ உடனே இருந்தனர். இதனையடுத்து அவருக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணியார் ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக