நெய்வேலி என்எல்சி அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க தேர்தல் திருவிழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 ஜனவரி, 2025

நெய்வேலி என்எல்சி அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க தேர்தல் திருவிழா.


கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளரும்,  அதிமுக முன்னாள் அமைச்சருமான செம்மலை, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் R.கமலக்கண்ணன், கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அமைப்பு செயலாளருமான சொரத்தூர்.  ராஜேந்திரன், கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இத்தேர்தலில், ஒன்பது இடங்களில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, நேற்று காலை ஆறு மணி அளவில், வாக்குப்பதிவு நடைபெற்றது. 

தலைவர், செயலாளர், பொருளாளர், அலுவலக செயலாளர் உட்பட 43 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவுற்று, 5 மணி அளவில், என்எல்சி அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க அலுவலகத்தில் அமைந்துள்ள,  அம்மா அரங்கில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.  ஒவ்வொரு வாக்குப்பதிவு முடிவடையும் போது, வெற்றி பெற்ற வேட்பாளர்கள், ஆரவாரத்துடன் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். 


இதனால் நெய்வேலி நகரத்தில், விடிய விடிய தேர்தல் திருவிழா திருவிழா களை கட்டியது. மேலும் என்எல்சி அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் தலைவராக பாரதிதாசனும், செயலாளராக வெற்றிவேலும், பொருளாளராக அமுல்ராஜ், அலுவலக செயலாளராக ஜாகிர் உசேன் உட்பட  வெற்றி பெற்ற துணைத் தலைவர்கள், பகுதி செயலாளர்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு, கழகப் பொதுச் செயலாளர் அறிவிப்பார்கள் என்று  வெற்றி பெற்ற வேட்பாளருக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 


இந்நிகழ்வில்  மாநில அம்மா பேரவை துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முருகுமணி உட்பட அண்ணா என்எல்சி தொழிற்சங்க நிர்வாகிகள்,  போக்குவரத்து துறை நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad