நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை தரைப்படை பிரிவு அகில இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கான ஏ சான்றிதழ் ஆயத்தத்தேர்வு நடைபெற்றது. திருநெல்வேலி 9 டிஎன் சிக்னல் கம்பெனி கமாண்டிங் அதிகாரி கர்னல் டிஆர்டி சின்ஹா உத்தரவின் பேரில் ஜூனியர் கமிஷன் அதிகாரி தசரத பாண்டியன் ஆயத்தத்தேர்வினை நடத்தினார்.
தலைமையாசிரியர் குணசீலராஜ் மற்றும் உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு ஆயத்த தேர்வு நடைபெற்றது. மதுரை என்சிசி தலைமையகத்தில் இருந்து வழங்கப்பட்ட வினாத்தாட்கள் மற்றும் விடைத்தாள்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு ஆயத்த தேர்வு நடத்தப்பட்டது.
தேசிய மாணவர் படை தரைப்படை பிரிவு மாணவர்கள் 56 பேர் தேர்வில் பங்கு பெற்றனர். அடுத்த மாதம் என்சிசி ஏ சான்றிதழ் தேர்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை, தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக