ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 ஜனவரி, 2025

ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா.

ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.. 

கல்லூரியில் ஒவ்வொரு துறையின் சார்பாகவும் தனித்தனியாக பொங்கல் வைக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விளையாட்டுப் போட்டியான பானை உடைத்தல், கயிறு இழுத்தல், சாக்கு ஓட்ட போட்டி போன்றவை மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. 

மேலும் மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, கவிதை போட்டி, ரங்கோலி, ஆகியவை சிறப்பான முறையில் நடைபெற்றன... நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் வழக்கறிஞர் ஜோ .ஜெயக்குமார் ரூபன் தலைமை தாங்கி பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். 

போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரியின் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர். ஜெயக்குமார், நிர்வாக அதிகாரி முனைவர்.வினோதா, துறை தலைவர்கள் முனைவர். ஆக்னஸ் பிரேமா மேரி, முனைவர் ஜாஸ்மின் சேவியர், முனைவர் ஜெமில்டா, முனைவர் நிஷா ரோஸ்பெல், முனைவர். ஜெனிபர் ஜாண், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

விழா ஏற்பாட்டினை உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் ஞானசெல்வன், அலுவலக மேலாளர் ஆல்வின் ராஜ்குமார், ஃபைன் ஆட்ஸ் அலுவலர் முனைவர் ஜூலியட் ஜெயபாக்கியம், பேராசிரியர்கள் சித்ரா செல்வகுமாரி, ஜாப்னி பென்சியா, முனைவர் ஸ்டான்லி ஜான்சன் அலுவலக உதவியாளர் ஞானராஜ் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். விழா முடிவில் அனைத்து மாணவ, மாணவர்களுக்கும் பொங்கல் வழங்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad