வீட்டில் கர்நாடக மாநில மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த வாலிபர் கைது பாட்டில்கள் பறிமுதல்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 ஜனவரி, 2025

வீட்டில் கர்நாடக மாநில மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த வாலிபர் கைது பாட்டில்கள் பறிமுதல்!

பேரணாம்பட்டு, அருகே கர்நாடக மாநில மது பாட்டில்களை பதுக்கி விற்பனை


பேரணாம்பட்டு, ஜன, 10-
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சுற்றுப்புற கிராமங்களில் குடியாத்தம் மது விலக்கு அமுல் பிரிவு இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையில் ஏட்டுகள் சந்திரபாபு, சரவணன் , சுப்பிரமணி  (புலனாய்வு பிரிவு) ஆகியோர் தீவிர மது விலக்கு வேட்டையில் ஈடுப்பட்டனர். அப்போது பேரணாம்பட்டு அருகே பத்தலப் பல்லி கிராமத்தில் சுப்பிரமணி என்பவரது  வீட்டில் கர்நாடக மாநில மது பாக்கெட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் மது விலக்கு போலீசார் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்ட போது அங்கு 180 மி.லி அளவு கொண்ட ரம்,  336 பாக்கெட்கள் ,90 மி.லி அளவு கொண்ட  ரம் 288 பாக்கெட்கள் , விஸ்கி 192 பாக்கெட்கள்  மொத்தம் 816 எண்ணிக்கை கொண்ட  ரூ 25 ஆயிரம் மதிப்புள்ள  மது பாக்கெட்களை போலீசார்  பறிமுதல் செய்தனர் .
போலீசாரை கண்டவுடன் சுப்பிரமணி தப்பியோடி தலைமறைவானார். சுப்பிரமணியிடம் மது பாக்கெட்களை விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் சுப்பிரமணியிடம்  அருகிலுள்ள எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் காரில் கர்நாடக மது பாக்கெட்களை கொண்டு வந்து விற்பனைக்கு கொடுத்துள்ளார் என்றும் 
தலைமறைவான சுப்பிரமணி மீது 22 கள்ளசாராய வழக்குகளும், ஆசீர்வாதம் மீது 3 கள்ள சாராய வழக்குகளும் உள்ளன என தெரிய வந்தது..
இது சம்மந்தமாக சுரேஷ் ,சுப்பிரமணி, ஆசீர்வாதம் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட சுரேஷை காட்பாடி சப் மாஜிஸ்ட்டிரேட் முன்பாக ஆஜர்படுத்தினர்.  தலை மறைவான சுப்பிரமணி, ஆசிர்வாதம் ஆகிய இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad