திருச்செந்தூர் முருகன் கோயில் ராஜகோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு அதனை பொருத்தும் பணி துவங்கியது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 ஜனவரி, 2025

திருச்செந்தூர் முருகன் கோயில் ராஜகோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு அதனை பொருத்தும் பணி துவங்கியது.

திருச்செந்தூர் முருகன் கோயில் ராஜகோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு அதனை பொருத்தும் பணி துவங்கியது.

உலகப் புகழ்பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடிக்கு பெருந்திட்ட வளாக பணிகளும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 100 கோடி செலவில் திருப்பணிகளும் நடந்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் கிழக்கு கோபுரம், சால கோபுரம், ராஜகோபுரம் ஆகியவை பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது. 

 இதில் ராஜகோபுரம் மட்டும் ரூ. 16.80 கோடி செலவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. 137 அடி உயரமம், 9 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் கடந்த நான்கு மாதங்களாக ராஜகோபுரத்தின் மேல் உள்ள 9 கலசங்கள் குமார தந்திர முறை படி பூஜை செய்யப்பட்டு தனியாக பிரித்து கழற்றி கீழே கொண்டுவரப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடந்தன. 

அப்பணிகள் நிறைவடைந்த நிலையில், அவற்றில் வரகு அரிசி நிரப்பும் பணி நடந்தது.  
பின்னர் கலசங்களை கயிறு கட்டி ராஜகோபுரத்தின் மேல் தளத்திற்கு கொண்டு சென்று பொருத்தும் பணிகள் துவங்கியது. முன்னதாக சிறப்பு பூஜைகள் ராஜ கோபுர வாசலில் நடந்தது. 

இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகரன்,தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருக்கோயில் விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர்,ஸ்தலத்தார் சபை தலைவர் மூர்த்தி, குமரகுருபரன் ஸ்தபதி திரிசுதந்திரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் கலசங்களை பிரித்தபோது அதில் 15 ஆண்டுகளாக வரகு அரிசிகள் கெடாமல் அப்படியே இருந்தது பக்தர்களிடையே பெறும் 
ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தமிழக குரல் செய்திகளுக்காக-தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad