இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டைதமிழக அரசு 7சதவீதமாக உயர்த்திடவேண்டும் தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 ஜனவரி, 2025

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டைதமிழக அரசு 7சதவீதமாக உயர்த்திடவேண்டும் தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தல்.

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை
தமிழக அரசு 7சதவீதமாக உயர்த்திடவேண்டும் 
தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தல்

ஸ்ரீவைகுண்டம்: சாதி வாரிய கணக்கெடுப்பை நடத்தி இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 7சதவீதமாக உயர்த்திட வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆறாம்பண்னை கிளை சார்பில் ''அழகிய முன்மாதிரி இப்ராஹீம்'' என்ற தலைப்பிலான 10மாத கால தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு ஆறாம்பண்ணை பள்ளி திடலில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் நவாஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இம்ரான், மாவட்ட பொருளாளர் ரஷித்காமில், துணைச் செயலாளர்கள் அசாருதீன், சித்திக், இமாம்பரீத், கிளைச் செயலாளர் காஜாமுகைதீன், பொருளாளர் உசேன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கிளைத்தலைவர் அப்துல்காதர் வரவேற்றார்.

கூட்டத்தில், நிர்வாகி மும்தாஜ் ஆலிமா ''இன்றைய பெண்களும் ஈமானிய நிலையும்'' என்ற தலைப்பிலும், மாநில பேச்சாளர் பாரூக் ''இந்தியாவில் பறிக்கப்படும் முஸ்லிம்களின் நிலை'' என்ற தலைப்பிலும் தணிக்கை குழு தலைவர் சுலைமான் ''சத்திய கொள்கையில் சமரசம் இல்லாத தலைவர் இப்ராஹிம்நபி'' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப் படுத்துகிறோம் என்ற பெயரில் கல்வியை ஒருசாரரிடம் இருந்து பறிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பது என்றும், இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு திரும்பபெறவேண்டும்.

இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கத்தில் வக்பு வாரிய சட்டத்தில் வேண்டுமென்றே திருத்தங்களை கொண்டு வர துடிக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு அதனை முற்றிலுமாக கைவிடவேண்டும். 
தமிழகத்தில் உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5இடஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் கடந்த காலங்களில் இஸ்லாமியர்களுக்கு கிடைத்துள்ள பயன்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,

மேலும், தமிழகத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தி இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை 7சதவீதமாக மாநில அரசு உயர்த்தி தந்திடவேண்டும், கடந்த 2023ம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மிகவும் பாதிக்கப்பட்ட ஆறாம்பண்ணை கிராமத்திற்குள் மீண்டும் மழைவெள்ளம் புகாமல் இருக்க ஆற்றின் கரைகளை உயர்த்தி பலப்படுத்திடவேண்டும்,

ஆறாம்பண்ணை தாமிரபரணி ஆற்றுப் படுகையில் பழுதான குடிநீர் உறைகிணறால் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான குடிநீர் கிடைத்திட புதிய உறைகிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்திடவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், கிளை துணைச்செயலாளர் அல்தாப், துணைத்தலைவர் சபியுதீன், மருத்துவஅணி செயலாளர் முஸம்மில், கிளை உறுப்பினர்கள் அப்துல்ஹமீது, மைதீன், முகமது அலி, காசிம், கனி, உஸ்மான், செய்யது, காலித், அப்துல்லாஹ், அப்சல், முஸம்மில் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad