காங்கயம் ரோடு வேலன் ஹோட்டல் வளாகத்தில் அமைந்திருக்கும் புத்தக கண்காட்சிக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம் எல் ஏ அவர்கள் கூறுகையில் பெருமைமிகு திருப்பூர் மாநகருக்கு புகழ் சேர்த்திடும் வகையில் தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட்
இணைந்து நடத்தும் 21-வது திருப்பூர் புத்தக திருவிழாவுக்கு சென்று கடல்போல் குவிந்துள்ள புத்தகங்களை, அரங்குகளை பார்வையிட்டேன்.
குறிப்பாக, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் சிந்து சமவெளி அரங்கு மிகுந்த பெருமையையும், வியப்பையும் அளிக்கிறது.
நம் திருப்பூர் மாவட்ட மக்களுக்கு அன்பு வேண்டுகோள்!
அறிவின் திறவுகோலாய் இருக்கின்ற நம் திருப்பூர் புத்தகக் காட்சிக்கு குழந்தைகளோடு வந்து பாருங்கள்! பயன் பெறுங்கள்! என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் உடன் கிட்ஸ் கிளப் தாளாளர் மோகன் கே.கார்த்திக் மற்றும் பலர் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக