திருப்பூர் புத்தக கண்காட்சியில் இரண்டாவது நாளான நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் கரு பழனியப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார் அப்போது காந்தியை ஆர்எஸ்எஸ் கொன்ற பிறகு காந்திநாடு என அறிவிக்க வேண்டும் என்று பெரியார் கூறினார் என கரு பழனியப்பன் பேசினார். இந்த பேச்சினை நிகழ்ச்சியில் இருந்த ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர் மோகனசுந்தரம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது அவரை அங்கிருந்த ஒரு நபர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்த இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பாஜக மாவட்ட நிர்வாகி செந்தில்வேல் தலைமையில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபரை கைது செய்ய வேண்டும் என கண்காட்சி வளாகத்தின் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமாதானப்படுத்தினர். இதனைக் கண்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் அந்த பகுதியில் இருந்த இஸ்லாமியர்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புத்தக கண்காட்சியில் இருந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர் இதனால் காங்கேயம் ரோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அப்போது இருதரப்பினரையும் காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். அப்போது கண்காட்சி திடலில் இருந்து வெளியே வந்த திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ மற்றும் தெற்கு மாநகர திமுக செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன் உள்ளிட்டோர் தமுமுக, மமக கட்சியினர் மற்றும் இதர இஸ்லாமியர்களையும் சமாதானப்படுத்தினர்
கலைந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். பிறகு அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் காங்கேயம் ரோடு பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக