நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 ஜனவரி, 2025

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்பு.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்பு.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார். 

அவர் பேசுகையில், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு கல்வி கற்க வேண்டும், தங்களுக்கு பிடித்தமான உயர்கல்வியை தேர்ந்தெடுத்து நன்கு படித்து நல்ல வேலையில் அமர வேண்டும், வரும் அரசு பொதுத்தேர்வில் அனைத்து படங்களிலும் சிறப்பான மதிப்பெண்கள் பெற வேண்டும், 

பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர், மற்றும் ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர் ஆகியோர் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad