சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் காதுகளை அறுத்து மூதாட்டி படுகொலை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 11 ஜனவரி, 2025

சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் காதுகளை அறுத்து மூதாட்டி படுகொலை.

 


சோழவந்தான் அருகே திருவேடகம்  வைகை ஆற்றில் காதுகளை அறுத்து மூதாட்டி படுகொலை.




மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம்  வைகை ஆற்றில் காதுகளை அறுத்து மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  திருவேடகம் காலனித்தெருவை சேர்ந்தவர் சின்ன காளை அவரது மனைவி பாப்பாத்தி வயது 80இவர் நேற்று இரவு அவரது ஊரான திருவேடகம் காலனி  வைகை ஆற்றில் இரண்டு காதுகள் அறுக்கப்பட்டும்  காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார் இது குறித்து தகவல் அறிந்த சோழவந்தான் போலீசார் அவரது உடலை மீட்டு உடல் கூர் ஆய்வுக்காக  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்த பாப்பாத்தி யின் காதுகள் அறுக்கப்பட்டு இருப்பதால் இவர் அணிந்திருந்த தங்கத்தோடுகளை திருடி செல்லும் நோக்கில் இந்த படுகொலை நடந்ததா அல்லது வேறு காரணங்களுக்காக கொலை செய்துவிட்டு  போலீசாரின் கவனத்தை திசை திருப்ப காதுகளை அறுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது இதை யடுத்து இந்த படுகொலை குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு அழுகிய நிலையில் ஒருவர் பிணமாக இதே வைகை ஆற்றில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கதுஇந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad