பாலியல் தூண்டுதலுக்கு ஆளான தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

பாலியல் தூண்டுதலுக்கு ஆளான தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது !

வேலூர் , ஜன 19 -

 வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தனியார் பள்ளி ஆசிரியர், மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலும் தனியார் பள்ளி நிர்வாக கபட நாடகங்களும் வேலூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ கைது.
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, கொணவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியர் முகமது சாலிஹா (வயது 35), இவர் மலைக்கோடியில் இயங்கி வரும் ஸ்பார்க் மெட்ரிகுலேசன் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் பள்ளியில் பயின்று வரும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் குளிக்கும் போது வீடியோ கால் செய்ய வேண்டும் எனவும், செய்யாவிட்டால் தேர்வில் மதிப்பெண் வழங்க மாட்டேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் போட்டோக்களையும் அனுப்பியதாக தெரிகிறது இந்நிலையில் சில நாட்களுக்குமுன்னர் உல்லாசத்திற்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை வீட்டில் உள்ளவர்களுக்கு கூறினால் மதிப்பெண் வழங்க மாட்டேன் என மிரட்டியுள்ளனர். ஜனவரி 16ஆம் தேதி வியாழக்கிழமை இம்மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டில் இருந்த தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக தின்று தற் கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் என்ன ஆனது என  கேட்டுள்ளனர். மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தனது தாயாரிடம் ஆசிரியரால் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து கதறி அழுதபடி கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இதன் அடிப்படையில் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான காவல் துறையினர், சம்பந்தப்பட்ட ஆசிரியர் முகமது சாலிஹா மீது தீவிர விசாரணை மேற்க்கொண்டு, விசாரணைக்குப் பின் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad