பேரணாம்பட்டு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக எம். தேசியமணி. நியமனம்!
வேலூர்,ஜன.19-
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஏரிகுத்தி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சிஅலுவலர் எம். தேசியமணி. பேரணாம்பட்டு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக நியமிக் கப்பட்டுள்ளார். இவரை முன்னாள் அமைச்சர் .கே.சி. வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தா. வேலழகன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி இவரை நியமனம் செய்து அறிவித்துள்ளார். ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம். தேசியமணி , முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தா. வேலழகன், பேரணாம்பட்டு முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவரும், பேரணாம்பட்டு ஒன்றிய அதிமுக செயலாளருமான பொகளூர் டி.பிரபாகரன், நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞர் எல். சீனிவாசன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக