கல்லபாடியில் முன் விரோத காரணமாக இளம்பெண் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய தயங்கும் காவல்துறை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

கல்லபாடியில் முன் விரோத காரணமாக இளம்பெண் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய தயங்கும் காவல்துறை!

கல்லபாடியில் இளம்பெண் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய தயங்கும் போலீஸார்!

வேலூர்,ஜன.20-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லபாடி  சாலை ஓரம் பட்டி பகுதியில் வசித்து வருபவர் மோனிஷா (வயது 21), த/பெ.ரவி. அவர் வீட்டுஅருகே நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்று வரும்போது அவரது வீட்டு அருகே உள்ள ஹேமநாத் (வயது 20), லோகேஷ்(வயது 18), குமார் (வயது 45) மற்றும் கலைவாணி  (வயது 40) ஆகிய நான்கு பேரும் சேர்ந்து முன்விரோதத்தை மனதில் வைத்து கொண்டு மோனிஷாவை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது மார்பகம் மீதும், முதுகு மீதும், தலை மீதும் சரமாரியாக கல்லாலும், கட்டையாலும் தாக்கியும், கத்தியால் சரமாரியாக குத்தியும் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த மோனிஷா சாலையில் விழுந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மோனிஷாவின் அண்ணன் அங்கு விரைந்து சென்று காயமடைந்து வலியாலும், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த தங்கை மோனிஷாவை மீட்டு காப்பாற்றி சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக கொண்டு வந்து அனுமதித்தார். மோனிஷா தீவிர சிகிச்சை  பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரை காவல் நிலையத்தில் கொடுத்தும் புகாரின் பேரில் விசாரணை நடத்தி ஹேமநாத் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.  இந்த நான்கு பேர் மீதும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டால் போலீஸார் விரைந்து நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று பாதிக்கப்பட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad